2008 ஆம் ஆண்டு வெளியான “தாம்தூம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் சாய்பல்லவி. இவர் மலையாள படமான “பிரேமம்” மூலம் ரசிகர்கள் இடையே நீங்காத இடத்தைப் பிடித்தார்.
“உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் நடன கலைஞராக பலர் மத்தியில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட இவர், நடிகையாக உருமாறி சமீபத்தில் தனுஷ் ஜோடியாக “மாரி 2” படத்திலும் நடிகர் சூர்யா ஜோடியாக “என்ஜிகே” படத்திலும் நடித்திருந்தார்.
இவர் தற்போது தெலுங்கு படமான “லவ் ஸ்டோரி” படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரிக்கு மருத்துவம் தொடர்பான தேர்வு எழுத வந்த போது தன் ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டு அவர்களை சந்தோஷப் படுத்தினார் சாய்பல்லவி.
சமீபத்தில் ஒரு பேட்டியில் எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டதற்கு, திருமணம் செய்து கொண்டால் தன் பெற்றோரை பிரிந்து இருக்க வேண்டும் அதனால் தான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் கடைசிவரை தன் பெற்றோரை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் அதுதான் தன் லட்சியம் என்றும் கூறியிருக்கிறார்.
இதை கேட்ட அவரது ரசிகர்கள் இது தவறான முடிவு தயவு செய்து இந்த முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்று தங்கள் கருத்தையும் கோரிக்கையையும் முன்வைத்து வருகிறார்கள்.