வொர்க் அவுட் செய்யும் ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால்… வைரலாகும் வீடியோஸ்!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.

ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை சாக்ஷி அகர்வால்.

இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி, அரண்மனை 3, புரவி’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவுகளில் வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார் சாக்ஷி அகர்வால். இவ்வீடியோக்களை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/CERa28AgVM1/

Share.