‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.
ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை சாக்ஷி அகர்வால்.
இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி, அரண்மனை 3, புரவி, குட்டி லவ் ஸ்டோரி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். சேலையில் சாக்ஷி அகர்வால் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் இந்த ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CGNSiOTg_Iq/?igshid=rsdakf9q0x3i
https://www.instagram.com/p/CGKkPjaAMn-/?igshid=ph3n0b6ojxvu
https://www.instagram.com/p/CGJbmwFg6Y1/?igshid=jcocxp0cs8jd