தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.
இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன், தெறி, சூப்பர் டீலக்ஸ், காத்து வாக்குல ரெண்டு காதல்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.
2021-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்போது சமந்தா நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்களும், ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் கொடுத்த அட்வைஸால் நடிகை சமந்தா 2-வது திருமணம் செய்து கொள்ள கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது.