தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.
இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. இப்போது, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
https://www.instagram.com/p/CGJky8OBhvv/?igshid=uufwqx7afd3c
https://www.instagram.com/p/CGC0YaKBt_Z/?igshid=1spa850pztzqo
https://www.instagram.com/p/CGESzJ-gH7x/?igshid=18y4ouq4mu8zy
https://www.instagram.com/p/CGFLfFZgn_U/?igshid=1ner5hfcytvyk