சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இப்போது இவர் நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சாகுந்தலம்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியுள்ளார்.
இப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் 3டி-யில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 29-ஆம் தேதி சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “சில மாதங்களுக்கு முன்பு Myositis என்ற ஆட்டோ இம்யூன் பாதிப்பு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கான சிகிச்சை எடுத்து குணமான பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், இந்த பாதிப்பு குணமாக நான் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்து கொள்கிறது. நான் சீக்கரமே குணமடைந்து விடுவேன் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது, சமந்தா தனது உடல்நலம் முன்னேறுவதற்காக பழனி முருகன் கோவிலின் படிவழி பாதையில் உள்ள 600 படிகளிலும் சூடம் ஏற்றியபடி நடந்து சென்று சாமி தரிசனம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.