‘சாகுந்தலம்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா!

  • January 9, 2023 / 03:34 PM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இப்போது இவர் நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சாகுந்தலம்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் அல்லு அர்ஹா, தேவ் மோகன், சச்சின் கடேகர், கபீர் பேடி, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். மணிஷர்மா இசையமைத்துள்ள இதற்கு சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் புடி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தை வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் 3டி-யில் ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழா மேடையில் இயக்குநர் குணசேகர் இப்படம் குறித்து பேசுகையில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோஸ் மற்றும் ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus