குட்டையான உடை அணிந்து தோழியுடன் சூப்பராக நடனமாடிய சமந்தா… வைரலாகும் வீடியோ!

  • July 29, 2023 / 11:00 AM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்களும், ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘சாகுந்தலம்’ படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் 3டி-யில் ரிலீஸானது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 29-ஆம் தேதி சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “சில மாதங்களுக்கு முன்பு Myositis என்ற ஆட்டோ இம்யூன் பாதிப்பு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கான சிகிச்சை எடுத்து குணமான பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தேன்.

ஆனால், இந்த பாதிப்பு குணமாக நான் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்து கொள்கிறது. நான் சீக்கரமே குணமடைந்து விடுவேன் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

சமீபத்தில், மிக விரைவில் இதற்கான சிகிச்சை எடுப்பதற்காக சமந்தா தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதாகவும், இதனால் அடுத்த ஒரு வருடத்துக்கு எந்த புதிய படத்திலும் கமிட்டாக வேண்டாம் என அவர் முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. தற்போது, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோழியுடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus