ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் வீடியோ!

  • March 6, 2023 / 06:40 PM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இப்போது இவர் நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்களும், ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸுக்காக சமந்தாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், இப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் 3டி-யில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அல்லு அர்ஹா, தேவ் மோகன், சச்சின் கடேகர், கபீர் பேடி, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சமந்தா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus