Samantha Ruth Prabhu & Kushi : அடேங்கப்பா… விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’-க்காக சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • February 21, 2024 / 02:38 PM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘குஷி’ என்ற தெலுங்கு படமும், ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘குஷி’ படம் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 1-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெயராம், சச்சின் கெடேகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகை சமந்தா ரூ.4.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus