சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘குஷி’ என்ற தெலுங்கு படமும், ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘குஷி’ படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியுள்ளார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜெயராம், சச்சின் கெடேகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
படத்தை வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில்,சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் ஸ்டில்லை ஷேர் செய்துள்ளார். இந்த ஸ்டில் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.