சீமராஜா படத்திற்கு சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் . நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டான் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை புரிந்தது . இந்த படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படங்களில் ஒன்று சீமராஜா . இந்த படத்தை பொன் ராம் இயக்கி இருந்தார் . சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக சமந்தா நடித்து இருந்தார் . சூரி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . சிம்ரன் , நேப்பொலியன் , லால் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் .

சீமராஜா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை . இருந்தாலும் படம் தொலைக்காட்சிகளில் நல்ல வரவேற்பை பெற்றது . நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது . சீமராஜா படத்திற்காக 18 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார் மேலும் நடிகை சமந்தா இந்த படத்திற்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது .

Share.