‘MYOSITIS’ நோயால் பாதிப்பு.. ஹைபர்பேரிக் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் சமந்தா!
April 27, 2023 / 12:16 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்களும், ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘சாகுந்தலம்’ படம் சமீபத்தில் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் 3டி-யில் ரிலீஸானது. கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 29-ஆம் தேதி சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “சில மாதங்களுக்கு முன்பு Myositis என்ற ஆட்டோ இம்யூன் பாதிப்பு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கான சிகிச்சை எடுத்து குணமான பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், இந்த பாதிப்பு குணமாக நான் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்து கொள்கிறது. நான் சீக்கரமே குணமடைந்து விடுவேன் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார். தற்போது, Myositis குணமாக ஹைபர்பேரிக் ஆக்சிஜன் சிகிச்சை (HYPERBARIC OXYGEN THERAPY) பெற்று வருவதாக சமந்தா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.