தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்த”பானா காத்தாடி” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை தற்போது கொண்டுள்ளார் இவர்.
https://www.instagram.com/p/CBn3AQoBEca/?igshid=16v770vuwwulo
கடைசியாக இவர் பிரேம் குமார் இயக்கத்தில் 96 படத்தின் ரீமேக்கான “ஜானு” என்ற படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து “காற்றுவாக்கில் இரண்டு காதல்” படத்தில் நடிக்கவுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்ததும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது லாக்டவுனில் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து சமந்தா உடற்பயிற்சி, சமையல்கலை, தோட்டக்கலை என்று பல விஷயங்களை செய்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமந்தா ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இவர் கடைசியாக தனது செல்ல நாய்க்குட்டிகளுடன் விளையாடுவது போன்ற ஒரு க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். சமந்தா ரசிகர்களுக்கு இது பெரிய ட்ரீட்டாக உள்ளது. லாக்டவுன் காரணமாக இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.