தென்னிந்திய நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமான பின்னும் பல வெற்றி படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா தனது நீண்டநாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சமந்தா ருத் பிரபு. பின் “பானா காத்தாடி” படத்தின் மூலம் நடிகையாக தன் திரையுலக பயணத்தை தொடங்கினார்.
அதன்பின்னர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பிரபலமான இவர் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் விஜய்,சூர்யா,விஷால்,தனுஷ் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்து தமிழில் வெளிவந்த திரைப்படம் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான “சூப்பர் டீலக்ஸ்” ஆகும்.
இவர் 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஊரடங்கில் தன் கணவருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமந்தா தோட்டக்கலை, சமையல், யோகா, உடற்பயிற்சி என அனைத்தையும் இந்த லாக்டவுனில் செய்துவருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பதிவுகள் முழுவதிலும் இந்த புகைப்படங்கள் குவிந்துள்ளது. தற்போது திரைப்படங்களில் தனது நிறைவேறாத ஆசை, அவர் நடித்துக்கொண்டிருக்கும் வெப் சீரிஸில் நிறைவேறியுள்ளதாக கூறியுள்ளார். தனக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும், தற்போது ஒருவர் சீரிஸில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் நாகர்ஜுனா வீட்டு மருமகள் என்பதை மனதில் வைத்து கதாபாத்திரங்களை தேர்வு செய்வதாகவும், அதனால் தனக்கு பொறுப்பு கூடியுள்ளது என்றும் கூறியுள்ளார். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்துவாக்குல ரெண்டு காதல்” எனும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்ததும் தொடங்கும் என்று திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.