ஒரே வாரத்தில் சமந்தாவின் ‘சாகுந்தலம்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • April 21, 2023 / 06:44 PM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்களும், ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘சாகுந்தலம்’ படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் 3டி-யில் ரிலீஸானது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அல்லு அர்ஹா, தேவ் மோகன், சச்சின் கடேகர், கபீர் பேடி, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மணிஷர்மா இசையமைத்துள்ள இதற்கு சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் புடி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, கடந்த 7 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus