நவம்பர் 4-ஆம் தேதி ரிலீஸாகும் சமந்தாவின் ‘சகுந்தலம்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த மோஷன் போஸ்டர்!

  • September 23, 2022 / 04:36 PM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இப்போது இவர் நடிப்பில் ‘யசோதா, குஷி, சகுந்தலம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சகுந்தலம்’ படத்தின் ரிலீஸுக்காக சமந்தாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று இதன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகுமாம்.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கி வருகிறார். மணிஷர்மா இசையமைத்து வரும் இதற்கு சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் புடி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் அல்லு அர்ஹா, தேவ் மோகன், சச்சின் கடேகர், கபீர் பேடி, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus