பவர்ஃபுல்லான வில்லி ரோலில் சமந்தா… வெளியானது ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 ட்ரெய்லர்!

  • May 19, 2021 / 10:25 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இப்போது, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் சீசன் 2-வின் டீசரை ரிலீஸ் செய்தனர்.

மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டப்போகிறாராம். இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் இவ்வெப் சீரிஸுக்கென ஸ்பெஷல் ட்விட்டர் எமோஜி வெளியிடப்பட்டது. இந்த எமோஜியை #TheFamilyMan, #TheFamilyMan2, #TheFamilyManOnPrime போன்ற ஹேஸ்டேக்குகளில் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளதாம்.

முதலில், இந்த சீரிஸை கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருந்தனர். பின், சில காரணங்களால் ரிலீஸை தள்ளி வைத்தனர். தற்போது, இவ்வெப் சீரிஸின் ட்ரெய்லரை சமந்தா ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். மேலும், புதிய ரிலீஸ் தேதி ஜூன் 4 என்று அறிவித்துள்ளார்.

1

2

3

4

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus