அடேங்கப்பா… சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

  • November 12, 2022 / 04:00 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘யசோதா’ நேற்று (நவம்பர் 11-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர்கள் ஹரி – ஹரிஷ் இயக்கியுள்ளார்கள். இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான மணிசர்மா இசையமைத்துள்ளார். இதனை ‘ஸ்ரீதேவி மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் உலக அளவில் ரூ.5.60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus