சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘யசோதா’. இந்த படத்தை இயக்குநர்கள் ஹரி – ஹரிஷ் இயக்கி வருகிறார்கள்.
இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான மணிசர்மா இசையமைத்து வருகிறார். இதனை ‘ஸ்ரீதேவி மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் டீசரை இன்று ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
