திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த சமீரா ரெட்டி அதிகமாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார். தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “வாரணம் ஆயிரம்” படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் சமீரா ரெட்டி.
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் வரும் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் இவரை ரசிக்காத ஆளே கிடையாது.
அவ்வளவு அழகான சமீர ரெடி தமிழில் நடிகர் அஜீத்துடன் “அசல்” எனும் படத்தில் நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான “வேட்டை” படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக கடைசியாக நடித்தார் சமீரா ரெட்டி.
இவர் அக்ஷய் வர்தே என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து தன் குடும்பத்தில் கவனம் செலுத்திவரும் இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
தனது குடும்பத்துடன் லாக்டவுன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்களையும் தன் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
தற்போது சினிமா துறை குறித்த தனது கருத்துக்களை பதிவிட்டுள்ள சமீரா ரெட்டி, சினிமா துறையில் நடிகைகளிடம் நடிப்பதற்கு ஒப்பந்தம் போடும்போதே முத்தக் காட்சிகள் இருக்கிறதா போன்றவற்றை குறிப்பிட்டு தான் ஒப்பந்தம் வாங்குவார்கள். ஆனால் ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்யும்போது இது பற்றி குறிப்பிடாமல் திடீரென முத்தக்காட்சியில் நடிக்க சொல்லி வற்புறுத்திய தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இவர் இந்தியில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறி, இவர் அதை மறுத்ததற்கு ஏற்கனவே முஸாவிர் படத்தில் முத்தக்காட்சியில் நடித்து இருக்கிறீர்களே அதனால் இதிலும் நடிக்க வேண்டும் என்று கூறினார்களாம்.
மேலும் சில நடிகர்கள் சமீராவுடன் பழகுவது மிகவும் கடினமான விஷயம் அவரை எளிதில் மடக்க முடியாது என்று கூறி இவரைப் பற்றிய விமர்சனங்களை பரப்பி விட்டார்களாம். சினிமா என்பது பரமபத விளையாட்டு போல பாம்பு எங்கு இருக்கிறது என்று அறிந்து நாம் தான் ஒதுங்கி நடந்து செல்ல வேண்டும் என்று சினிமா பற்றிய தனது கருத்தை பதிவிட்டுள்ளார் சமீராரெட்டி.