தியேட்டருக்கு நோ… நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகப்போகும் சமுத்திரக்கனியின் ‘ஏலே’!

  • February 11, 2021 / 06:04 PM IST

தமிழில் 2014-ஆம் ஆண்டு வெளியான ‘பூவரசம் பீப்பி’ என்ற படத்தை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இதனைத் தொடர்ந்து ‘சில்லுக் கருப்பட்டி’ எனும் ஆந்தாலஜி படத்தை இயக்கினார். இப்போது ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘ஏலே’ மற்றும் ‘மின் மினி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஏலே’ படத்தில் கதையின் மிக முக்கிய ரோல்களில் இயக்குநர் சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி ஆகியோர் நடித்துள்ளனர். கபேர் வாசுகி – அருள்தேவ் இணைந்து இசையமைத்துள்ள இதற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா – ஹலிதா ஷமீம் சேர்ந்து படத்தொகுப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை ‘Y NOT ஸ்டுடியோஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் தயாரித்துள்ளது. சமீபத்தில், இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. முதலில், படத்தை நாளை (பிப்ரவரி 12-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல், நேரடியாக விஜய் டிவியில் வருகிற பிப்ரவரி 28-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்ப ப்ளான் போட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus