ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… முக்கிய தகவலை சொன்ன சமுத்திரக்கனி!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது. இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதா அம்மாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது, இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் “தலைவி திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது… மிக்க மகிழ்ச்சி.

பேரன்பான இயக்குநர் ஏ.எல்.விஜய் … செல்வி.கங்கனா ரனாவத் … திரு.அரவிந்த் சாமி மற்றும் என் உடன் நடித்த சக நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி..! வெல்வோம்..!” என்று கூறியுள்ளார். மேலும், நடிகர் சமுத்திரக்கனி ‘தலைவி’ படத்தின் புதிய ஸ்டில்ஸை ஷேர் செய்துள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் இந்த வாரத்தில் முடிவடைந்து விடுமாம்.

Share.