தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவர் நடிப்பில் ‘சைரன், ஜீனி, தனி ஒருவன் 2, பிரதர்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘சைரன்’ படம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சாந்தினி தமிழரசன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார், செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதனை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி ரூ.1 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.