தாயுடன் சேர்ந்து ஹூப் நடனமாடியுள்ளார் நடிகை சம்யுக்தா ஹெட்ஜ்!

பிரபல கன்னட நடிகையான சம்யுக்தா ஹெட்ஜ், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த “வாட்ச்மேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

பின்பு அதே ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “கோமாளி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நட்டு தேவ் இயக்கத்தில் வெளிவந்த “பப்பி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

கன்னடாவில் இவர் அறிமுகமான 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “கிரிக் பார்ட்டி” என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அந்த படத்திலும் இவர்தான் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் கன்னடாவில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றுள்ளார். சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இந்த அறிமுக ஹீரோயின், லாக்டவுனில் உடற்பயிற்சி செய்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் தனது தாயுடன் சேர்ந்து ஹூப் நடனமாடி, என் தாய் சிறு குழந்தை போல எல்லாவற்றிலும் புத்துணர்ச்சியுடன் பங்கேற்று கொள்வார் என்று கூறி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் இவர் பொது இடத்தில் ஹூப் நடனம் ஆடுவதற்காக பிரச்சனைக்குள்ளாகி பின்பு பிரச்சனை ஏற்படுத்திய நபர் இவரிடம் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CFgRVfZFIy2/?igshid=1i85awgr43wuc

Share.