விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அனிதா சம்பத் “இல்ல எல்லாரும் பண்றத தான் நானும் பண்றேன். ஆனா, என்ன மட்டும் அப்படி சொன்னாங்க” என்று சனம் ஷெட்டியிடம் சொல்கிறார்.
அதற்கு சனம் ஷெட்டி “மனசுல இருக்கிறதை பேச வேண்டாம்னு சொல்றதுக்கு சம்யுக்தா யாரு பிக் பாஸ் assistant-ஆ” என்று அனிதா சம்பத்திடம் சொல்கிறார். பின், அனிதா “இது ஒரு சப்பை மேட்டர். எனக்கு தான் actually அசிங்கமா இருக்கு இது” என்று சொல்கிறார். அதற்கு சனம் “decent time limit-ல பேசுங்கன்னு first-ஏ சொல்லணும். சொல்லலையா, அப்புறம் ஒருத்தருக்கு மட்டும் நீங்க சொல்றது தப்பு தான்” என்று சொல்கிறார். அதன் பிறகு சம்யுக்தா கார்த்திக் “இந்த சனம் அனிதாவை ஏத்தி ஏத்தி விடுறா பாரேன். waste of time, waste of energy” என்று ஹவுஸ்மேட்ஸிடம் சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
#Day26 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/XcwFA2Tmwt
— Vijay Television (@vijaytelevision) October 30, 2020