• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விவாத மன்றத்தில் சம்யுக்தா Vs ஆரி… வெளியானது ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!

விவாத மன்றத்தில் சம்யுக்தா Vs ஆரி… வெளியானது ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!

  • November 4, 2020 / 04:10 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விவாத மன்றத்தில் சம்யுக்தா Vs ஆரி… வெளியானது ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் விவாத மன்றம் டாஸ்கில் நீதிபதியாக இருக்கும் சுசித்ரா “கேஸ் நம்பர் 4, சம்யுக்தா Vs ஆரி” என்று சொல்கிறார். முதலில் சம்யுக்தா “எல்லாரும் அவரை கார்னர் பண்றாங்கன்னு சொல்றாரு அது உண்மையே கிடையாது” என்று சொல்கிறார். பின், ஆரி “ஒரு கேப்டனோட responsibility என்னனே தெரியாம கேப்டனா இருக்காங்க. பாலாஜி உங்களை கேப்டன் ஆக்குனாருங்குறதுக்காக நீங்க செய்யலையா?” என்று கேட்கிறார்.

அதற்கு சம்யுக்தா “எந்த incidents-ல நான் பாலாஜியை சப்போர்ட் பண்ணியிருக்கேன்?” என்று கேட்கிறார். பின், ஆரி “இந்த வீட்ல நீங்க வந்து exercise பண்ண வந்திருக்கீங்களா? எதுக்கு வந்திருக்கீங்கங்குற கேள்வியை அவங்கதான் என்கிட்ட கேட்டாங்க. இந்த வீட்ல exercise பண்றது எத்தனை பேர்னு எல்லாருக்கும் தெரியும்” என்று சொல்கிறார். அதற்கு பாலாஜி ஏதோ சொல்ல, உடனே ஆரி கோபத்துடன் “தம்பி உனக்கு எதாவது பேசும்போது வாய்ப்பு கிடைச்சா இங்க வந்து பேசு” என்று சொல்கிறார். அதற்கு பாலாஜி “இல்ல பேச முடியாது” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

#Day31 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/u44fN0C3pN

— Vijay Television (@vijaytelevision) November 4, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aari
  • #Bigg Boss 4
  • #Samyuktha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஜிம்மில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்து கவர்ச்சி தாகமூட்டிய ‘மன்மத லீலை’ பட நடிகை!

ஜிம்மில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்து கவர்ச்சி தாகமூட்டிய ‘மன்மத லீலை’ பட நடிகை!

தனது அம்மாவுடன் பார்ட்டியில் நடனமாடிய ‘மன்மத லீலை’ பட நடிகை… வைரலாகும் வீடியோ!

தனது அம்மாவுடன் பார்ட்டியில் நடனமாடிய ‘மன்மத லீலை’ பட நடிகை… வைரலாகும் வீடியோ!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… முக்கிய ரோலில் நடிக்கும் ‘பிக் பாஸ் 4’ நடிகை!

‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… முக்கிய ரோலில் நடிக்கும் ‘பிக் பாஸ் 4’ நடிகை!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ‘மன்மத லீலை’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ‘மன்மத லீலை’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் சம்யுக்தா ஹெக்டே… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் சம்யுக்தா ஹெக்டே… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version