‘பிக் பாஸ் 4’ : “அந்த அளவுக்கு நெகட்டிவிட்டி எனக்கு இருக்கு”… ரியோவிடம் புலம்பும் சனம்!
November 27, 2020 / 11:49 AM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ரியோ ராஜ், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷாவிடம் சனம் ஷெட்டி “இந்த போன் டாஸ்க்ல எல்லாருக்கும் உள்ளுக்குள்ள என்ன இருந்துச்சோ எல்லாமே ப்ரேக் ஆயிடுச்சு. மூஞ்சி பார்த்து குட் மார்னிங் கூட என்னால சொல்ல முடியல.
அந்த அளவுக்கு நெகட்டிவிட்டி எனக்கு இருக்கு. அப்படியே பிரிஞ்சிருச்சு” என்று சொல்கிறார். அதற்கு ரியோ ராஜ் “அதுக்கு நிறையா effort போட்டாச்சு. அந்த effort-க்கு tired ஆயிடுச்சு எனக்கு போதும்” என்று சொல்கிறார். பின், சனம் ஷெட்டி “இது end point-ன்னு வச்சுக்கலாம். இதுக்கு அப்புறமாவும் வரும். opinions இருக்கிறது இருக்கத்தான் செய்யும். எனக்கும் இருக்கு” என்று சொல்கிறார். அதற்கு ரியோ ராஜ் “அந்த effort-க்கு thanks சனம். ஆனா, அதுக்கு மேல எனக்கு interest-ஏ இல்ல சனம்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.