தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சனா நடராஜன். இவர் அறிமுகமான முதல் தமிழ் படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே’. இந்த படத்தை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு பிறகு மாதவனின் ‘இறுதிச்சுற்று’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘2.0’. டாப்ஸியின் ‘கேம் ஓவர்’, தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சஞ்சனா.
சஞ்சனா சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது, இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.