மீராமிதுனை கிண்டலடித்துள்ள சாண்டியின் முன்னாள் மனைவி!

  • August 27, 2020 / 08:31 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான மீராமிதுன், தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தற்போது ட்விட்டரில் தன் சர்ச்சைக்குரிய கமெண்ட் மூலம் வைரலாகி வருகிறார்.

முன்னணி நட்சத்திரங்கள் குறித்து வசைபாடி வரும் மீராமிதுனை பலரும் கோபத்துடன் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள். சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியதற்கு அவரது ரசிகர்கள் மீராமிதுன் இவர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் மீராமிதுன் இதை ஒரு நெகடிவ் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இவர் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றி கொச்சையாக பேசி வருகிறார்.

இதனால் கோபமடைந்த பல ரசிகர்கள் இவரை வீடியோக்கள் வெளியிட்டு மிரட்டியும் தமிழ்நாடு பக்கம் வந்து பாருங்கள் என்று பேசியும் வருகிறார்கள். அதையும் தன் ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து வருகிறார் மீராமிதுன்.

இந்நிலையில் தற்போது மீரா மிதுன் நித்யானந்தா மீது தன் அன்பை வெளிப்படுத்தி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒவ்வொருவரும் அவரை கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். அவரைப் பற்றிய நெகட்டிவான செய்திகளை பரப்பி வருகிறார்கள் ஆனால் நித்தியானந்தா தனக்கென தனி நாட்டை உருவாக்கி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறார். அவருடைய நாட்டிற்கு செல்ல நானும் விருப்பப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை பார்த்த நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை ஷேர் செய்து, கைலாசாவுக்கு செல்ல விரும்பும் ரோல்மாடல். நினைத்தேன்! சம்பந்தமே இல்லாமல் இந்த பாப்பா விஜய், சூர்யா, ஜோ என்று நமக்கு பிடித்தவர்களை டார்கெட் செய்து தப்பாக பேசுவார். போய் வா மகளே போய் வா. மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பலரும் அப்படியாவது அவர் தமிழ்நாட்டை விட்டு போகட்டும் நல்லதுதான் என்றும், அவர் கைலாசவுக்கு செல்வதில் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus