Vadakkupatti Ramasamy : 5 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • February 7, 2024 / 11:03 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இப்படம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், ஜான் விஜய், ரவி மரியா, கூல் சுரேஷ், பிரசாந்த், சேசு, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை ‘பீப்பிள் மீடியா பேக்டரி’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார், சிவாநந்தீஸ்வரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்ருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இப்படம் ரூ.8.90 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus