பழனி முருகன் கோவிலில் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்த சந்தானம்… வைரலாகும் வீடியோ!

  • February 22, 2023 / 08:02 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ மூலம் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கிய சந்தானத்தை காமெடியனாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தி அழகு பார்த்தவர் சிலம்பரசன். அந்த படம் தான் ‘மன்மதன்’.

அதன் பிறகு சந்தானத்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சச்சின், அன்பே ஆருயிரே, சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், சிறுத்தை, வானம், ஒரு கல் ஒரு கண்ணாடி, ராஜா ராணி’ என காமெடியனாக நடிக்க படங்கள் குவிந்தது.

பின், கதையின் நாயகனாக வலம் வர ஆசைப்பட்ட சந்தானம் ‘அறை எண் 305-ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு 1 & 2, சக்க போடு போடு ராஜா, A1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், சபாபதி, டிக்கிலோனா, குலுகுலு, ஏஜென்ட் கண்ணாயிரம்’ ஆகிய படங்களில் நடித்தார்.

இப்போது சந்தானம் நடிப்பில் ‘கிக், வடக்குப்பட்டி ராமசாமி, அரண்மனை 4’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சந்தானம் பழனி முருகன் கோவிலில் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus