80’s Buildup : சந்தானத்தின் ’80’ஸ் பில்டப்’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • November 24, 2023 / 07:07 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் ‘வடக்குப்பட்டி ராமசாமி, 80’ஸ் பில்டப்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ’80’ஸ் பில்டப்’ படம் இன்று (நவம்பர் 24-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.கல்யாண் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், மயில்சாமி, முனிஸ்காந்த், மன்சூர் அலிகான், கூல் சுரேஷ், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus