சந்தானம் டிடெக்டிவ்வாக நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’… வெளியானது சூப்பரான டீசர்!

  • January 21, 2022 / 01:24 PM IST

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தெலுங்கு திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’. இந்த படத்தை இயக்குநர் ஸ்வரூப் RSJ இயக்கியிருந்தார். இதில் நவீன், ஸ்ருதி ஷர்மா, சுஹாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது. தற்போது, இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார்.

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், இந்துமதி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை இயக்குநர் மனோஜ் பீதா இயக்கி வருகிறாராம். இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை இன்று சந்தானத்தின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus