தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே சந்தானம் நடிக்கும் புதிய படமான ‘பிஸ்கோத்’-தின் ஷூட்டிங் முடிந்து விட்டது.
இந்த படத்தை பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இதில் சுவாதி முப்பாலா, தாரா அலிஷா பெர்ரி என சந்தானத்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளாம். இப்படத்தில் சந்தானம் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் வலம் வருவாராம். சமீபத்தில், நடிகர் சந்தானம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதன் ட்ரெய்லரை வெளியிட்டார்.
‘பாகுபலி’ முதல் ‘கொரோனா’ வரை ட்ரெண்டுக்கு தகுந்தாற்போல் அனைத்து விஷயங்களையும் வைத்து காமெடி வசனங்களில் சந்தானம் கலக்கியிருக்கும் இந்த ட்ரெய்லர் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
The fun-filled rollercoaster @iamsanthanam’s #Biskoth is all set for a grand theatrical release on #Diwali
Produced & Directed By @Dir_kannanR
A @tridentartsoffl Release#BiskothDiwali@radhanmusic @MasalaPix @mkrpproductions @shammysaga @EditorSelva @johnsoncinepro pic.twitter.com/IBSCik5gGn
— kannan (@Dir_kannanR) November 10, 2020