தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே சந்தானம் நடிக்கும் புதிய படமான ‘பிஸ்கோத்’-தின் ஷூட்டிங் முடிந்து விட்டது.
இந்த படத்தை பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இதில் சுவாதி முப்பாலா, தாரா அலிஷா பெர்ரி என சந்தானத்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளாம். இப்படத்தில் சந்தானம் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் வலம் வருவாராம். தற்போது, இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், நடிகர் சந்தானம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதன் ட்ரெய்லரை வெளியிட்டார். ‘பாகுபலி’ முதல் ‘கொரோனா’ வரை ட்ரெண்டுக்கு தகுந்தாற்போல் அனைத்து விஷயங்களையும் வைத்து காமெடி வசனங்களில் சந்தானம் கலக்கியிருக்கும் இந்த ட்ரெய்லர் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘ஜீ ப்ளெக்ஸ்’ கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரத்யேகமாக பணம் செலுத்தி படம் பார்க்கும் OTT தளமான ‘ஜீ ப்ளெக்ஸ்’-யில் இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம்.