தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே சந்தானம் நடிக்கும் புதிய படமான ‘பிஸ்கோத்’-தின் ஷூட்டிங் முடிந்து விட்டது.
இந்த படத்தை பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியிருந்தார். இதில் சுவாதி முப்பாலா, தாரா அலிஷா பெர்ரி என சந்தானத்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளாம். இப்படத்தில் சந்தானம் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் வலம் வருவாராம். சென்சார் குழுவினரிடம் ‘யு’ சர்டிஃபிகேட் பெற்ற இந்த படம் சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது.
இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காமெடி வசனங்களில் சந்தானம் கலக்கியிருக்கும் இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று முன் தினம் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸை ‘ஜீ தமிழ்’ என்ற சேனல் கைப்பற்றியது. தற்போது, இப்படத்தின் புதிய ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டுள்ளது.
https://twitter.com/tridentartsoffl/status/1329359200971935748