தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே சந்தானம் நடிக்கும் புதிய படமான ‘பிஸ்கோத்’-தின் ஷூட்டிங் முடிந்து விட்டது.
இந்த படத்தை பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இதில் சுவாதி முப்பாலா, தாரா அலிஷா பெர்ரி என சந்தானத்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளாம். இப்படத்தில் சந்தானம் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் வலம் வருவாராம்.
தற்போது, இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சந்தானம் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை நேற்று (ஜூலை 31-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளார். இந்நிலையில், சந்தானம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் ஒரு அப்டேட்டை ட்விட்டரில் சொல்லியிருக்கிறார் ஆர்.கண்ணன். இதன் ட்ரெய்லரை வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
The Fun-Filled trailer of @iamsanthanam’s #Biskoth with be OUT on Aug 3rd at 4PM. Stay tuned for a fun filled roller coaster
Produced & Directed By @Dir_kannanR
A @tridentartsoffl Release @radhanmusic @masalapixweb @mkrpproductions @EditorSelva @shammysaga @johnsoncinepro pic.twitter.com/nO6m62ZOtf
— kannan (@Dir_kannanR) July 31, 2020