தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் ‘கிக், வடக்குப்பட்டி ராமசாமி, டிடி ரிட்டன்ஸ்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் பார்ட் 3-ஆம்.
இதில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மசூம் ஷங்கர், FEFSI விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 14 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.33 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.