DD Returns 2 : சூப்பர் ஹிட்டான ‘டிடி ரிட்டன்ஸ்’… பார்ட் 2-வுக்கு ஸ்கெட்ச் போட்ட சந்தானம்!

  • January 27, 2024 / 08:23 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் ‘வடக்குப்பட்டி ராமசாமி, டிடி ரிட்டன்ஸ்’ என 2 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் கடந்த ஆண்டு (2023) ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார். ஹாரர் காமெடி ஜானர் படமான இது ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் பார்ட் 3-ஆம்.

இதில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மசூம் ஷங்கர், FEFSI விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, தங்கதுரை மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, சந்தானம் – இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் கூட்டணியில் ‘டிடி ரிட்டன்ஸ்’ பார்ட் 2 உருவாகப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை பிரபல நடிகர் ஆர்யா தயாரிக்கவுள்ளாராம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus