ட்ரிபிள் ஆக்ஷனில் சந்தானம்… ‘டிக்கிலோனா’வின் மியூசிக்கல் அப்டேட்!

  • August 20, 2020 / 06:54 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே சந்தானம் நடிக்கும் புதிய படமான ‘டிக்கிலோனா’-வின் ஷூட்டிங் முடிந்து விட்டது.

இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கி வருகிறார். பொதுவாகவே சந்தானம் படத்தில் காமெடி சூப்பராக இருக்கும். இந்த படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ரோல்களில் சந்தானம் மாஸ் காட்டப்போகிறாராம். மேலும், முக்கிய ரோல்களில் அனகா, ஷிரின், ஹர்பஜன் சிங், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், ஆனந்த ராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘KJR ஸ்டுடியோஸ்’ சந்தானம் ரசிகர்களுக்காக ஒரு மியூசிக்கல் அப்டேட்டை ட்விட்டரில் சொல்லியிருக்கிறது. முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் வாங்கியுள்ளதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus