அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தானத்தின் ‘குலுகுலு’ செய்த வசூல் இத்தனை கோடியா?அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தானத்தின் ‘குலுகுலு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • August 3, 2022 / 12:20 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானத்தின் புதிய படமான ‘குலுகுலு’ கடந்த ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ரத்னகுமார் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அதுல்யா, நமீதா, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் – சேசு, மகாநதி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus