தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தை இயக்குநர் ஆனந்த் நாராயன் இயக்கி வருகிறார்.
இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ப்ரியாலயா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் தம்பி இராமையா, விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், பால சரவணன், கூல் சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதனை ‘கோபுரம் பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் GN.அன்புச்செழியன் தயாரித்து வருகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது, கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் இந்த படத்துக்கு ‘இங்க நான் தான் கிங்கு’ என டைட்டில் வைத்துள்ளதாக அறிவித்ததுடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.#IngaNaanThaanKingu#GNAnbuchezhian @Sushmitaanbu @gopuramfilms @Gopuram_Cinemas… pic.twitter.com/Jn2629UVP3
— Kamal Haasan (@ikamalhaasan) February 28, 2024