தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானத்தின் புதிய படமான ‘பிஸ்கோத்’ சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது.
இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காமெடி வசனங்களில் சந்தானம் கலக்கியிருக்கும் இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சந்தானம் நடித்துள்ள புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பாரிஸ் ஜெயராஜ்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை சந்தானமே ட்விட்டரில் அறிவித்ததுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இதில் ஹீரோயினாக அனைகா சொட்டி நடிக்கிறார். மேலும், முக்கிய ரோலில் சஸ்டிகா ராஜேந்திரன் நடிக்கிறாராம். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படத்தை வருகிற ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
Bacha Bachike Namaste 🙏🏻😃#ParrisJeyaraj#JohnsonK @Music_Santhosh @kumarkarupannan #LarkStudios @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @proyuvraaj#A1Combo’SNext pic.twitter.com/fkklZzWkGC
— Santhanam (@iamsanthanam) December 1, 2020