80’s Buildup : அடேங்கப்பா… ’80’ஸ் பில்டப்’-க்காக சந்தானம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • November 28, 2023 / 08:44 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் ‘வடக்குப்பட்டி ராமசாமி, 80’ஸ் பில்டப்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ’80’ஸ் பில்டப்’ படம் கடந்த வம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.கல்யாண் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், மயில்சாமி, முனிஸ்காந்த், மன்சூர் அலிகான், கூல் சுரேஷ், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக நடிகர் சந்தானம் ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus