தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது, சந்தானம் நடிப்பில் ‘கிக், வடக்குப்பட்டி ராமசாமி, டிடி ரிட்டன்ஸ்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தை எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் பார்ட் 3-ஆம்.
‘டிடி ரிட்டன்ஸ்’-ல் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மசூம் ஷங்கர், FEFSI விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்துக்காக நடிகர் சந்தானம் ரூ.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.