தற்போது நாடு முழுவதும் கொரோனா காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். லாக்டோன் காரணமாக எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலையில் பொழுதுபோக்கிற்கான அம்சங்கள் என்றால் அது டிவி, மொபைல், லேப்டாப் மட்டும்தான்.
இதனால் இணையதளங்களில் படம் பார்ப்பது, பழைய மேடை நிகழ்ச்சிகளை பார்ப்பது, சினிமா பிரபலங்களை பற்றி வீடியோக்களைப் பார்ப்பது என்று மக்கள் தங்களது நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். இதனால் தற்போது முன்னணியில் இருக்கும் பல நட்சத்திரங்களின் வெளிவராத வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் தற்போது காமெடி என்றால் இவரது பெயர் இல்லாமல் இருக்காது என்பதுபோல பிரபலமடைந்துள்ளது நடிகர் சந்தானம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி, படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர், 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான “மன்மதன்” படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, வானம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் காமெடி நடிகராக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை குவித்தார் சந்தானம்.
2014 ஆம் ஆண்டு “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்த சந்தானம், தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
தற்போது ஆரம்ப காலகட்டத்தில் சந்தானம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தபோது எடுத்த ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பதிவை வெளியிட்டு” சந்தானம் லோக்கல் வீடியோ சேனல்ல வேலை செய்தபோது எடுத்ததாம். முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சந்தானம் லோக்கல் சேனல்ல வேலை பாத்தப்போ எடுத்ததாம்.. முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும். pic.twitter.com/OgqFSTFsU0
— Sarathy (@Mugavarii) July 16, 2020
இந்த வீடியோவில் சந்தானம் ஒருவரிடம் பேசும்போது நீங்கள் ஹீரோவாக நடிப்பீர்களா என்பதற்கு அவரை கலாய்த்து நான்லாம் எப்படி ஹீரோவாவேன் என்று கேட்டிருப்பார். ஆனால் தன் கடும் முயற்சி மூலம் இன்று சினிமா துறையில் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியுள்ளார் சந்தானம்.
தற்போது சந்தானம் கார்த்திக் யோகி இயக்கத்தில் “டிக்கிலோனா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளாராம். இவரே இதில் ஹீரோவாகவும், வில்லனாகவும், காமெடியனாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.