சினிமாவில் டாப் ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் மம்மூட்டி. இவரது ரசிகர்கள் ‘மெகா ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். 1971-ஆம் ஆண்டு வெளியான மலையாள படம் ‘அனுபவங்கள் பாலிச்சக்கள்’. இதில் மம்மூட்டி ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக அறிமுகமானார். ‘தேவலோகம்’ என்ற மலையாள படத்தில் தான் மம்மூட்டி கதையின் நாயகனாக நடித்தார்.
ஆனால், அந்த படம் முழுமையாக முடிக்காததால் ரிலீஸாகவில்லை. அதன் பிறகு பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்தார் மம்மூட்டி. தமிழ் திரையுலகில் ‘மௌனம் சம்மதம்’ என்ற படத்தின் மூலம் என்ட்ரியானார். இந்த படம் ஹிட்டானதும், மம்மூட்டிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, புதையல், மறுமலர்ச்சி, எதிரும் புதிரும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், பேரன்பு’ என தமிழ் படங்கள் குவிந்தது.
மம்மூட்டி மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், மம்மூட்டி நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு மெகா ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
1994-யில் ரிலீஸான தமிழ் படம் ‘நாட்டாமை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சரத்குமார் நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டுமென கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் சாய்ஸாக இருந்தது மம்மூட்டி தானாம். பின், சில காரணங்களால் மம்மூட்டியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.