நாகசைத்தன்யாவின் ‘கஸ்டடி’-க்காக சரத்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • May 19, 2023 / 02:08 PM IST

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நாகசைத்தன்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘கஸ்டடி’ கடந்த மே 12-ஆம் தேதி தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நாகசைத்தன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ‘இசைஞானி’ இளையராஜாவும், அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக நடிகர் சரத்குமார் ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus