அடேங்கப்பா …கார்த்தியின் சர்தார் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா ?

  • October 22, 2022 / 02:44 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் சர்தார் . இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . ராஷி கண்ணா , ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் . மேலும் நடிகை லைலா முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் ( கார்த்தி ) ஒரு விளம்பர வெறி கொண்ட அதிகாரி, பின்னர் அவர் இந்திய உளவுத்துறை அமைப்புகளின் இராணுவ ரகசியங்களைக் கொண்ட ஒரு முக்கியமான கோப்பை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் போது, கோப்பிற்கும், மாஸ்டர்-இன் மாறுவேடத்தில் இருக்கும் சந்திர போஸ் என்ற சர்தார் என்ற முன்னாள் உளவாளிக்கும் இடையே உள்ள தொடர்பை விஜய் கண்டு பிடிக்கிறார் . இப்படையாக சர்தார் படம் அமைந்து உள்ளது .

நடிகர் கார்த்தி சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் . அதனால் இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மேலும் படம் வெளியான முதல் நாளில் கார்த்தியின் சர்தார் படம் 4 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus